நிதர்சன்- கருத்துகள்

நன்றி! காதல் என்பதே அழகு தானே...

கழியார்வ வரைவடிவு
மாயை

உண்மையில் ஒரு நேரத்தில் எப்படியும் ஒருவர் விட்டுகொடுப்பது தான் காதல். சினிமாக்களில் காட்டபடுவது போல ஒருவருக்கு ஒருவர் படைக்கப்பட்டதாக எந்த ஜோடியும் பொதுவாக அமைந்து விடுவதில்லை. அவர்கள் தம்முள் பரிமாறிக்கொள்ளும் அன்பின் மூலமாகவே தங்களை அவ்வாறு ஆக்கிக்கொள்கிறார்கள். இதற்கு விட்டுக்கொடுப்பு மிகவும் அவசியம். யாருமே 1௦௦ வீதம் சரியாக இருந்து விடுவதில்லை. அந்த பிழைகளையும் தவறுகளையும் அனுசரித்து அரவணைத்து செல்வது தான் உண்மையான காதல் இந்த காதலர்கள் தான் பின்னர் ஒருவருக்கொருவர் உருவாக்கபட்டவர்கள் போல வாழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் விட்டுக்கொடுப்பு என்பது இரு பக்கங்களிலும் இருக்க வேண்டும். ஒரு விடயத்துக்கு இருவரும் விட்டுகொடுக்க நினைப்பது உண்மையில் வரம் தான் அப்படியான காதல் இருப்பது மிகவும் அருமை. ஆனால் ஒரு விடயத்தில் ஒருவராவது விட்டுக்கொடுக்கும் போது தான் பலமடைகிறது. எனினும் எல்லா சமயங்களிலும் ஒருவரே விட்டுகொடுப்பது உண்மையில் இயலாத விடயம். அது ஆரோக்கியமாக கூட இருக்காது. இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை கொண்டுபோவதற்கு தான் காதல் அப்படி இருக்கும் போது எப்போதுமே ஒருவர் மட்டும் மனம் வருந்தி விட்டுக்கொடுத்து கொண்டிருப்பது முறையாகாது. இது ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. அன்பு சரியாக பரிமாறப்படுவது போல தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும் இருவரிடையேயும் பரிமாறப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் எந்த நினையிலும் இந்த உலகில் சமம். எனவே இருவரும் பரஸ்பரம் விட்டுகொடுத்து பழகுவது தான் ஆரோக்கியமான காதலுக்கு அழகும் பலமும்.

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி


நிதர்சன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே