RameshSadasivam Erode- கருத்துகள்

கல்வி

எண்ணங்களை துளிர்க்க
வேண்டும்
கல்வி.,!

எண்களை கொண்டு சுருக்கி
விட்டது நம் கல்வி முறை !

ஆம்.....,!
மாண்டான் மாணவன் ..
பள்ளியிறுதி மதிப்பெண்களை
பார்த்து ...,!

குமாஸ்தாக்களை உருவாக்க
ஆங்கிலேயனின்

மெக்காலே கல்வி முறையை
இக்காலமும் பின்பற்றுவது
பேதமை .,!

தன்னம்பிக்கை வளர்க்கும்
என்று கற்ற கல்விக்கு
தன்உயிரை தாரை வார்த்தார்
எம் மாணவ செல்வங்கள் ..,!

கேளுங்கள் கொடுமையை
35 க்கு ஒரு மதிப்பெண்
குறைந்து விட்டதாம் ..,!

தன்னுயிரை தானீந்து
பெற்றோரின் கனவை
பூஜ்யமாக்கி விட்டாயே ..,!

மானுடத்தை
தன்னம்பிக்கையை
அறிவை
வளர்க்க வேண்டும் கல்விமுறை ...,!

மாற்றங்கள் நிறைந்த உலகிலே
மாற வேண்டும் நம் கல்விமுறை ...,
மனித உயிர்காவுகள் போதும்.,

இந்திய அரசே
ஒத்துள்ள பட்டியலில் உள்ள
கல்வியை
மாநில அரசோடு
ஒருங்கிணைந்து முன்னேற்றுங்கள் !

வாழட்டும் எம் இளைய தலைமுறை !
வளரட்டும் அவர் எழுச்சிமிகு சிந்தனைகள் ..,!


RameshSadasivam Erode கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே