Shalini Krish- கருத்துகள்

சிசுக்களுக்காய் ஒரு குரல் அதுவும் மிகவும் வன்மையாய் , தமக்காய் அவர்கள் வாய்திறந்து பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
இழி செயல்கள் செய்தெம்மை
இன்னும் இன்னும் கொல்வாயா
கொல்வதென்றால் சொல்லிவிடு
மிருக வயிற்றில் பிறந்திடுவோம் !
இவை மிகவும் அருமையான வரிகள்.மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வரிகள்.இனியாயினும் மாறுதல்கள் உண்டாகட்டும் இந்த மண்ணுலகில்.உன் குரல் கொண்டு சிசுக்களுக்காய் பேசிய கவிஞனே உனக்கு என் நன்றிகள்.

யாரும் அதிகம் எழுத வேண்டும் என நினைக்காத தலைப்பில் அழகாக , நேர்த்தியாக உருவாக்கப்பட்ட நல்லதொரு கவிதையாக இந்த அகோரிகள் புலப்படுகிறது .
அகோரிகள் பற்றி நிறைய சொல்வதற்கு இருந்தாலும் கவிதையின் நேர்த்திக்கு இதுவே போதுமானதாய் உள்ளது.மாறுபட்ட தலைப்பில் சிறப்பானதொரு கவிதை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் தோழரே ..!

கோரச்சம்பவம் ஒன்றினை இங்கே இந்தக்கவிதை படம்பிடித்துக்காட்டுகிறது.இத்தகைய கொடூரமான சம்பவம் பற்றி கேட்டறிந்தவர்களுக்கு இதன் இன்னல் புரிவதில்லை அந்த இன்னலை இந்தக்கவிதை விளம்பி நிற்கிறது.

கவிதை நன்று எனினும் சொற்கள் மனதில் வலியை ஏற்படுத்துகிறது. அதனால் தான் போலும் இந்த (20 + வயதுடையவர்கள் மட்டும் படிக்கவும்) .


Shalini Krish கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே