நான் ஒரு கற்பழிக்கப்பட்டச் சிறுமி – கே.எஸ்.கலை
(20 + வயதுடையவர்கள் மட்டும் படிக்கவும்)
காமவெறியோடு மனித உரு கொண்டு
அலையும் அரக்கனொருவனால்
உருக் குலைந்து சீரழிந்த
சிறு குழந்தை நான் !
யாரும் இல்லா காட்டுக்குள்ளே
வானம் மட்டும் சாட்சி சொல்ல
கட்டாக்காலி நாயொன்று
குதறிப்போட்ட மாமிச பிண்டமானேன் !
பத்து வயதுப் பூர்த்திக்கு
பத்து நாட்கள் பாக்கியிருக்கும்
பருவம் அடையா என்னுடலில்
தாண்டவம் ஆடினான் அரைக்கிழவன் !
வளர்ச்சி இல்லா என் உடம்பில்
வளர்ந்தது எப்படி உன் ஆசை ?
பச்சைக் குழந்தை என் மீது
இச்சை தீர்க்க ஏன் வந்தாய் ?
பள்ளி உடையில் தவழும் என்னில்
பள்ளி ஆசை நீ கொண்டாய்
பருவம் அடையா என்னை நீ
பருவிக் கீறிப் பசி தீர்த்தாய் !
அஞ்சி நிமிட ஆசை தீர்க்க
பிஞ்சி உடலை பிச்சித் தின்றாய்
எஞ்சி இருக்கும் வாழ்வை போக்க
அஞ்சி துடிக்கும் பேதையானேன் !
வெட்டாத உன் நகங்கள்
கீறிக் கிழித்த என்னுடலில்
கொட்டாரம் அடித்து நீ
கண்டதென்ன சந்தோசம்?
துடித்து வெடித்த என்னுடலில்
கெடுத்து நீயும் கூத்தடித்து
மயங்கி கிடந்த என் மீது
மேய்ந்து நீயும் முடித்தாயே !
பூப்படையா பூவொன்றை
பிடுங்கி நீயும் சீரழித்து
சப்பி மென்று தின்றுவிட்டு
துப்பி நீயும் சென்றாயே !
கத்திக் கதறி சத்தம் போட
பொத்திய வாயில் சத்தம் இல்லை
வேட்டை நாயாய் வெறியோடு- இந்த
அபலை மானை தின்றாயே !
யாருமற்ற இடம் என்றால்
பிணத்தில் கூட சுகம் காண
இணக்கம் சொல்லுமா
உன் உடம்பு ?
பெற்ற பிள்ளை மஞ்சம் வந்தால்
எத்தனை தடவை தடவி ருசிப்பாய்
மோகம் தீர்க்க தாகம் கொண்டு
பெற்ற மகளையும் நீ கெடுப்பாய் !
எண்சட்டம் கணக்கு செய்யும்
எனைக் காக்க என்ன சட்டம் ?
எந்த சட்டம் இருந்தென்ன
இழந்த வாழ்க்கை திரும்ப வருமா?
குரூரத்தின் உச்சத்தில்
கொடுமை செய்யும் அரக்கர்களை
கொன்றொழிக்க வேண்டுமென்று
கொந்தளித்துக் கேட்கின்றேன் !
(இதனை ஒரு சமூக அவலத்தின் விம்பமாக பாருங்கள். உங்கள் மனதை கஷ்டப்படுத்தும் வரிகள் இருந்தால் கருத்தில் அது பற்றி தெரிவியுங்கள். தயவு செய்து Flag Report கொடுத்து கடத்தப்பட்ட எனது மற்றொமொரு ஆக்கமாக இதனை மாற்றிவிட வேண்டாம்)