(((( !!!மது விரும்பும் கவிஞனே!!!)))

தமிழனெனும் பெருமைகொண்டு
தலைசிறந்த தாய்மொழியில்
கவிதை வடிக்கும்
கவிஞனே !!
மதியை கெடுக்கும்
மதுனக்கு வேண்டுமா ?
கத்தியால் சாதிப்பதை
புத்தியை தீட்டி
கவிதை வடித்து
சாதிக்க துடிக்கும்
கவிஞனே !!
சிறு மூளையை
பாதிக்குமந்த பானத்தை -நீ!
பருகத்தான் வேண்டுமா ?
அரக்கர்களின் அட்டுழியத்தை
அழிக்க பிறந்த
கவிஞனே!!!
அரக்க செயலில்
ஈடுபட வைக்குமந்த
அரக்க பானத்தை -நீ!
அருந்தத்தான் வேண்டுமா ?
எங்கோ நடக்கும்
அநியாங்களுக்கு நீதி
வேண்டி துடிக்கும்
கவிஞனே !!
உன்னிலையை கெடுத்து
ஊர்சிரிக்க உன்குடும்பம்
அழ அசிங்கபடவைக்கும்
அந்த அசூரபானத்தை -நீ !!
அருந்தத்தான் வேண்டுமா ?
கவி வடிக்க
எழுதுகோல் எடுக்கும்
உன் கரத்தால்
சிரத்தை சிதைத்து
குடும்பத்தை அழிக்குமந்த
அழுகிய பானத்தை
தொடத்தான் வேண்டுமா ?
சிந்தியுங்கள் ஒரு கணம் ............
(கவிஞர்களை தவிர மற்றவர்கள் குடிக்கலாம் என்பது என்நோக்கமல்ல ..நாலு பேருக்கு நல்லது நடக்கட்டும் என் சிந்திக்கும் கவிஞன் ஒரு போதும் மதுவை நினைக்க கூடாது என்பதே இதன் நோக்கம் )