கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது !

பிறக்கப் பிறக்க
பிழிந்து கொன்று
பிளந்து தின்றோம்,
அடைகாக்கும்போதே
அவித்தும் தின்றோம் !

அடுத்த ஒன்றின்
பிறப்பிற்காக
காத்திருக்கிறோம் - வந்தவுடன்
எரித்து மகிழ்வோம் !

இருப்பதை இன்பமாகவும்,
இல்லாததை துன்பமாகவும்
கற்பனை செய்கிறோம் !
தோன்றாத போதும்
துடித்தன தானே நம் இதயம் !

உயிரை குழாய்வழி
ஒழுகாமல் ஊற்றிவிட்டு,
வேண்டும்போது
வேண்டிய வண்ணம்
வேக வைக்கிறோம் !
அணுவிலிருந்தும் பிறப்பித்து
அணு அணுவாக
சாக வைக்கிறோம் !

அடிமைப்படுத்துவதாய்
தவறாக நினைத்து
அடிமையாகிவிட்டோம்...!
ஆம், நாம் மின்சாரத்தின்
நிரந்தர அடிமைகள் !

அவனின்றி அணுக்கள்
அசையுமோ அசையாதோ
அவதானிக்க தெரியவில்லை,
அதுவின்றி அணு மட்டுமல்ல
அணுவின் நுனிகூட அசையாது...!
மின்சாரம் இல்லாத உலகம்
கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது !

எழுதியவர் : வினோதன் (12-Oct-12, 8:03 pm)
பார்வை : 272

மேலே