லேனா பெருமாள்- கருத்துகள்

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி-2015

நாளைய தமிழும் தமிழரும்

நாளைய தமிழும் தமிழரும்

வனத்தில் வாழ்ந்த போது சைகையில் தொடங்கினோம்
உயிரும் மெய்யுமாய் உருபெற்ற ஒரே மொழி
இரண்டாயிரம் ஆண்டுகள் மேலே உனக்கு
அகவை என்றால் வியப்பே வியந்து நிற்கும்
இடமிருந்து வலம் வரும் உன் அணிவகுப்பே
பல மொழிகளுக்கு முன் மாதிரி
நீ பயணித்த வழி தடங்கள் கல்வெட்டுகளில்
கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றன
எழுத்துகள் எண்கள் என தனி தனியே
உருவம் கொடுத்த ஒப்பற்ற பிரம்மா
இணையத்தில் கால் பதிக்க எத்தனையோ
இந்திய மொழி பாதங்கள் துடித்த போது
முதல் பாதம் பதித்த ஆம்ஸ்ட்ராங் நீ தான்
உன்னை உச்சரிப்பதால் மட்டுமே தமிழன்
என கர்வம் கொள்கின்றேன்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடியவன்
இன்றும் கடல் கடந்து ஒரு காவியம்
படைக்க துடிக்கிறான் தன உறவுகளுக்காய்
இரத்த சேற்றில் ஒன்றரை லட்சம் விதைகள்
விதைக்கப்படதே ஞாபகம் வருகிறதா???
நாளை அந்த முளைப்பின் முகவரிகளுக்கு
ஈழம் என பெயர் வைப்போம்

எழுதியவன் வ.லெ.பெருமாள்
சென்னை 600116
அலை பேசி +919894163714

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி |

" இப்படி நாம் காதலிப்போம்"

இளமையின் இனக்கவர்ச்சியால்
விழிகளில் உதயமாகி,உணர்வில் கலக்காமல்
உடலில் கலந்து உதாசீனப்படும் காதலை
மீண்டும் உயிர்தெழ ஒரு சின்ன முயற்சி
செயற்கை போதையில் இயற்கைக்கு
சமாதி கட்டும்,நம் உயிர் வேளாண்மையை
இயற்கை உரமிட்டு “நம்மாழ்வாரை”
கொஞ்சம் காதலிப்போம்
மூப்பு எய்தும் நம் பெற்றோர்களை
முதியோர் இல்லம் அனுப்பாமல்
முற்பிறவி கடனாய் நினைத்து
இப்பிறவியில் பேணி காதலிப்போம்
பண்டிகை நாட்களில் கொண்டாட்டம்
போடாமல் ஆதரவு இல்லாதவர் இல்லம் தேடி
சென்று அன்பை பொழிந்து அன்பை பெறுவோம்
இலக்கிய உப்பரிகைகளை அலங்கரித்த
அந்த அண்ணல்களின் உன்னத நோக்கல்களை
மீண்டும் சுத்தப்படுத்த சூளுரைத்து
மனித நேயம் காதலிப்போம்

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி

சாதி ஒழி/ மதம் அழி/சாதி!!

காற்று எந்த மூக்கினுள் சென்று வர
சான்றிதழ் கேட்டது??
தாகம் தீர்க்க தண்ணீர் எந்த தாசில்தாரை
பார்க்க சொன்னது??
ஏழை வயிற்றில் எரியுமே
பசிநெருப்பு எந்த பேதம் பார்த்து எரிந்தது!!!
எல்லா அவமானங்களையும் தாங்கி சுழலும்
என் பூமி எந்த வர்ணாஸ்வரத்திற்கு
கட்டுப்பட்டது
மனிதா கருவறையுனுள் இருக்கும் வரை
நீ, நீயாகத்தான் இருந்தாய் வெளி வந்த பின் ஏன்
வெட்கப்படும் படி நடந்தாய்
எந்த பசு பரந்தாமனை பார்த்து பால் சுரந்தது
எந்த ரோஜா கர்த்தரை பார்த்து பூத்தது
எந்த நிலவு அல்லாவை பார்த்து வானில் முளைத்தது
இயற்கையின் உயர் அங்கீகாரம், மனிதா
நமக்கு என்பது உண்மையானால்
இனியாவது விட்டொழிப்போம்
கம்யுனல் ஜி.ஒ க்களையும்
காலம் கடந்த மத கோட்பாடுகளையும்

சாதி ஒழி/ மதம் அழி/சாதி!!

காற்று எந்த மூக்கினுள் சென்று வர
சான்றிதழ் கேட்டது??
தாகம் தீர்க்க தண்ணீர் எந்த தாசில்தாரை
பார்க்க சொன்னது??
ஏழை வயிற்றில் எரியுமே
பசிநெருப்பு எந்த பேதம் பார்த்து எரிந்தது!!!
எல்லா அவமானங்களையும் தாங்கி சுழலும்
என் பூமி எந்த வர்ணாஸ்வரத்திற்கு
கட்டுப்பட்டது
மனிதா கருவறையுனுள் இருக்கும் வரை
நீ, நீயாகத்தான் இருந்தாய் வெளி வந்த பின் ஏன்
வெட்கப்படும் படி நடந்தாய்
எந்த பசு பரந்தாமனை பார்த்து பால் சுரந்தது
எந்த ரோஜா கர்த்தரை பார்த்து பூத்தது
எந்த நிலவு அல்லாவை பார்த்து வானில் முளைத்தது
இயற்கையின் உயர் அங்கீகாரம், மனிதா
நமக்கு என்பது உண்மையானால்
இனியாவது விட்டொழிப்போம்
கம்யுனல் ஜி.ஒ க்களையும்
காலம் கடந்த மத கோட்பாடுகளையும்


லேனா பெருமாள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே