rishvan- கருத்துகள்
rishvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [72]
- மலர்91 [32]
- கவின் சாரலன் [32]
- அஷ்றப் அலி [22]
- C. SHANTHI [16]
rishvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)
புதுப்பானை புத்தரிசி தித்திக்க வெல்லமும்
கொத்து மஞ்சள் சுற்றி செஞ்சாந்து அதில் பூசி
வாசல்தோறும் கோலமிட்டு...
மாவிலைத் தோரணத்தை வீடெங்கும் ஆபரணமாக்கி
புத்தாடைதனை உடுத்தி தைத்திருநாளில் உதிக்கும்
பகலவனைப் போற்றி...
அடுத்த வருடப் பொங்கலை அரசிடம் கையேந்தாமல்
அறுத்து வந்த நெல்கதிருடன் அறுசுவையாய் சமைத்து
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ...
விலையில்லாத பச்சரிசியை உலையிலிட்டு பொங்கிடும்
நிலைமாற... நல்வளம்பெற.. மிகைவிளைச்சல் கண்டிட
பருவமழையைத் தரவேண்டி...
பானைப் பொங்கல் பொங்கி பாகுடனே கொதித்து வழிய
உற்சாகம் பீறிட்டு 'பொங்கலோ பொங்கலென்று''
உச்சரித்து வணங்குமுன்...
நினைவில் கொள்வோம் இதனை...
ஆற்று மணலை அள்ளி அள்ளி
கோட்டை வீட்டை கட்டி கட்டி
ஊற்றுநீர் சுரக்கவில்லை என
ஊர்கூடி பொங்கல் வைத்தால்
தூறல்மழையை தந்திடுமா சூரியன்...?
தடுத்திடுவோம் மணல் கொள்ளைதனை
நட்டிடுவோம் மரக்கன்றுகளை
மழை வளத்தை பெறுவோம்
மழைமிகை மாநிலம் ஆவோம்.
நன்றி.. என்னுடைய வலைதளைத்தைப் படிக்கவும்... ரிஷ்வன்.கொம்
நன்றி ப்ரியா... தொடர்ந்து படிக்கவும்.
நன்றி.... rishvan