thushanthini- கருத்துகள்

கவிதை: மழை தூரல்....

சிறு துளி மழைத்துளி ஒரு துளி
விழுந்தது என் கையில்
மறுதுளி விழுகையில் இடைவெளி
தெரிவது என் கண்ணில்
மழைச்சாரல் மழைத்துரல்
வெறும் வானம் கரு மேகம்
குளிருட்டும் பனிமேகம்

காற்று வந்து கலைத்தது
மழைத்தூரல் அதை தொலைத்தது
மனதில் வாட்டம் ஒன்று வந்தது
சிறு வட்டம் இட்டு சுழன்றது.

கண்மூடும் நேரத்தில் காணாமல் போவாயோ....
உனைத் தேடி காத்திருந்தேன் கனவாய்
நீ சென்றாயோ ...

வானம் உந்தன் கண்கள் என்றால்
மேகம் அது கண்விழிப்படலம்
கண்ணீர்த்தளியாய் மழையே நீ
மீண்டும் வரனும்....
வானத்தின் சோகங்கள் தீர்ந்ததா அதில்
கண்ணீர்க்கடல்தான் இல்லையா?..

மழையே மழையே நீ வேண்டும் வேண்டும்....
உனையே அழைத்தேன் விழித்தூரல் போடும்.......

கடல் உந்தன் தலைவி என்றால்
நீராவி உனக்கு தூது வரும்
பிரிவில் வாடும் உன் தலைவிக்கோ
உன் புதுமுகம் காட்ட வர வேண்டும்

கடல் அன்பின் ஆழம் புறியலயா?
உன் மனதில் ஈவிரக்கம் இல்லையா?
மழையே மழையே நீ வர வேண்டும்
உடனே .......
துளியே துளியே மண்ணில் விழ வேண்டும் தனியே.....

உன் அன்பின் ஆழமே
இக்கவிதையின் நீளம்....
மிகவும் அருமை தோழி.


thushanthini கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே