கவிதைகளில் கலைச்சொற்கள்
*இனிய அறிவிப்பு*
*தேடல் களம் அறக்கட்டளை*
சார்பில்,
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,
*கவிதைகளில் கலைச்சொற்கள்*
எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,
*காணொளி கவியரங்கம்*
வருகிற *31.01.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.
எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.
அவ்வகையிலான இத்தொடர் நிகழ்வில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 - இலக்கியக் கலைச்சொற்களை
24-வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.
*கவிதைக்கான தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.*
நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*
https://forms.gle/2JvP2DAMhBZCCMFp9
அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருள்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. *மறுகு* - வீதி;
2. *பணிலம்* - சங்கு
3. *ஆணம்* - நேயம், நேசம், வாஞ்சை;
4. *துனி* - வருத்தம், ஊடல்;
5. *ஆராமம்* - பூங்கா, பூந்தோட்டம்;
6. *எலுவை* - தோழி;
7. *ஓதை* - முழக்கம், ஒலி, ஓசை;
8. *கடும்பு* - சும்மாடு, சுற்றம்;
9. *வட்டிகை* - தூரிகை, சித்திரம்;
10. *ஆஞ்சி* - அஞ்சு, அச்சம்;
11. *ஆய்* - அழகு, நுண்மை, சிறுமை;
12. *ஞஞ்ஞை* - மயக்கம்.
மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 30.01.2021-க்குள், அனுப்ப வேண்டிய அலைபேசி எண் 8695006900
*முயன்றால் விண்ணைத் தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் நம் பெயரைப் பதிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*
பாசத்துடன்,
*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.
8695006900
பங்குபெறும் அனைவருக்கும் அழகிய மின்சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com