எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் யாரோ... யார் நீ.?-வித்யா உயிரெழுத்துக்களை மட்டுமே உச்சரிக்கத்தெரிந்த...

நான் யாரோ... யார் நீ.?-வித்யா

உயிரெழுத்துக்களை மட்டுமே
உச்சரிக்கத்தெரிந்த
என் முதல் கனவாக
இருந்திருக்கவேண்டும் அது.........


விதியறியா புணர்ச்சி விதியில்
விதியென புணர்ந்த
முதலிரவாக
இருந்திருக்க வேண்டும் அது.........


தாழ்ப்பாள் இல்லாத கதவுகளின்
காட்சி ஒலிபரப்பு நிகழ்ந்த
கலவர நிலையாக இ
ருந்திருக்க வேண்டும் அது............


கொஞ்சம் கொஞ்சமாக
சாம்பல் உதிர்க்கும்
விரலிடுக்கில் ஒட்டிக்கொண்ட
ஒற்றை சிகரெட் காம ஊர்வலம்
நடத்தும் திருவிழாவாக
இருந்திருக்க வேண்டும் அது............


விருப்பமில்லாமல்
கடந்துவந்த மதுக்கடை
நினைவுகளில் தொடர்ந்து
நாளைய விடியலை
நிச்சயம் செய்து கொண்ட
நிலவரமாக
இருந்திருக்க வேண்டும் அது..........


சாஸ்திரங்களையும்
சம்பிரதாயங்களையும்
சுமந்து திரியும் கள்ளிச்செடிக்கு
தாலி கட்டிய
ராகு காலமாக
இருந்திருக்க வேண்டும் அது.......


யாரோவாகிய நான்
யார் நீ
என அறியும் தேடலின் தொடக்கமாக
இருந்திருக்க வேண்டும் அது...........
விருப்பமில்லா நம் திருமணம்........!
****************************************************************************

19.5 2014 பதிந்த என் கவி.

நாள் : 5-Sep-14, 4:16 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே