எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது நான்காம் உலகப்போர் நான் நதியில் படுத்து பாலையில்...

இது நான்காம் உலகப்போர்

நான்
நதியில் படுத்து
பாலையில் நீந்தி
வருவதற்குள்
விடிந்துவிட்டது .
அட்ச ரேகை
தொடாமல்
பூமத்திய ரேகை
பார்க்க விரும்பினேன் .
இந்து சமுத்திரம்
என்னிடம் சொல்லியது
செங்கடலுக்கு போ
அங்கு
ஒருவர் காத்திருப்பார்
அவர் தலையில்
தொப்பி அணிந்திருப்பார்.
வெற்றுக் கோசங்களை உடைத்து
புதிய பாதையில்
நீ பயணிப்பாய்.
அந்த பயணத்தில்
இரவுமில்லை
பகலுமில்லை..
உனக்கென்று எதுவுமில்லை.
ஆனாலும்
உனக்கு பஞ்சமில்லை.
இப்போது புரிந்தது
இறந்த அவரின்
பிறப்பைக் காண
இதோ
புறப்பட்டு விட்டேன்...
என்னோடு
வந்தவர்களின் கைகளில்
செவ்வண்ண
கைக்குட்டை சிரித்தது....

சுசீந்திரன்.

நாள் : 21-Sep-14, 10:29 am

மேலே