பொய் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகும் மலர்கள் காய்க்காமல் இருந்தன...
பொய்
மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகும்
மலர்கள் காய்க்காமல் இருந்தன
வண்டின்
மலட்டுத் தன்மையை மறைத்து
மாமியார் தோட்டக்காரி
சொன்னாள்:
மலட்டுப் பூ.
ரகசியம் தெரிந்த பூமட்டும்
ராத்திரி அழுவது
ஊரார் கண்ணுக்கு
தெரிய நியாயமில்லை.
சுசீந்திரன்.