எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ராதே கிருஷ்ணா!!!!!! ராதே கிருஷ்ணா !!!!! நமக்கு நாம்...

ராதே கிருஷ்ணா!!!!!! ராதே கிருஷ்ணா !!!!!

நமக்கு நாம் தான் எல்லாம் செய்கின்றொம் என்கின்ற நினைப்பு வரும் வரை கடவுள் நம்மை வேடிக்கை பார்பான்.

உடல் அழியக்கூடியது; ஆத்மா அழியாதது.

உடல் வலிமை குறையலாம்; முதுமையும் நோயும் உடலை வாட்டலாம்; உடலைச் சார்ந்த பெருமையும் புகழும் மறையலாம். ஆனால், ஆத்மா அழியாதது; மறையாதது; மாறாதது.

அந்த ஆத்மாதான் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால், பயமின்றி வாழலாம்.

ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.

கிருஷ்ணன் கூட இருந்து நமது செயல்களை நடத்துகின்றான் என்கின்ற உணர்வு இருக்குமேயானால் கிருஷ்ணன் நம் கூட இருந்து நம் கை பிடித்து நம்மை வழி நடத்தி செல்வான்.

பதிவு : முரளிதரன்
நாள் : 14-Jan-15, 7:40 am

மேலே