கைகளில் சிக்காத உன்னை நான் கவிதையில் சிறை வைக்கிறேன்...
கைகளில் சிக்காத உன்னை நான்
கவிதையில் சிறை வைக்கிறேன்
கன்நேரமும் பிரியாமல் உன்
நினைவோடுதான் உயிர்த்திருக்கிறேன்.....
தொலை தூர வானாய் நீயும்
தொடத்தேடும் காற்றாய் நானும்
தொடர்புகள் இன்றியும் இன்னும்
தொடர்ந்திருப்போம் அன்பு தனில்....
இமைகளை இறுக மூடியபடி
என்னை நீ நினைத்துப் பார்
இறுக்கமாய் உன்னை பற்றியபடி
உன் மூச்சில் நான் இருப்பேன்.....
விரும்பியும் விலகியும் நமக்குள்
நடக்கும் விதவித ஒப்பனைகள் கூட
என் கற்பனைக்கு தீனியிட்டு
என்னை கவி எழுத தூண்டுகிறது....
உனக்குள் ஓயாமல் அலைபாயும்
அத்தனை ஓசைகளையும் நீ
உன் இதழ்களை மூடியபடி எனக்கு
மிதமான மெளனம் பரிசளிக்கிறாய்....
உன் முகத்து வியர்வைத்துளி
எனக்குதீர்த்தமாய் தோணுமடா
விரல்களின் இடுக்கில் இறுகப்பற்றி
எந்தன் விரல்களுக்கு இதம் கொடு.....
உருவமற்ற இக் காதலில்
உயிர்கொடுத்து சேர்ந்திருப்போம்
சுவாங்களை பகிர்ந்தபடி
நேசத்தோடு வாழ்ந்துமுடிப்போம்....