எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்மில் வேரூன்றிய வேற்றுமைகளை வேரறுத்து களைந்திட இன்றே விழித்தெழுவோம்...

நம்மில் வேரூன்றிய வேற்றுமைகளை வேரறுத்து
களைந்திட இன்றே விழித்தெழுவோம் வீரமாக...
நாளைய தலைமுறை ஒற்றுமை பேணிட
தெளிந்த பாதை காட்டிடுவோம் முன் சென்று...
நானும் நீயும் மனிதனாய் இருக்கும் போது
நமக்குள் எதற்கு நூறு பேதங்கள்...??
சாதிகள் கொண்டு நாம் துலங்கி தெரிந்தால்
சகதியினுள் புரளும் பன்றிகளாய் தெரிவோம்..
நாமும் மதம் தலைக்கேறி அரக்கர்கள் ஆனால்
சாக்கடையினுள் நெளிந்திடும் புழுக்களாய் தெரிவோம்..
காசு பணம் வசமிருக்க வசதியாகலாம்
மனதில் நல்ல எண்ணம் இருக்க நிம்மதியாகலாம்..
ஒப்பனை பூசி திரைமுன் நடிப்பவன் நடிகன் என்றால்
இயல்பாய் வாழ்வினில் நடித்திடும் நாமோ என்னவாவோம்??
உழைப்பவன் எவனும் நமக்கு நிகரென எண்ணி
மக்களுள் நாமும் மக்களாயிருப்போம்...
தலைமையை தனக்கென கேட்டிடும் மனதும் ஓர்நாள்
தலைக்கனம் கொண்டு தலைகால் மறந்து ஆடிடும்.
மனிதர்களுள் மனதினால் கோடி மாற்றங்கள் உண்டு
மரணத்தை வென்றிட நம்மில் யார் தான் உண்டு..??
தனக்காய் வாழ்ந்து தனிமை கண்டவன் மனிதனல்ல
உயிர்களை மதித்து தன்உணர்வுகள் வென்றவன் மனிதன்...
செயற்கையை நாடி சீக்கிரம் வேண்டுமா சாவு
இயற்கையை நம்பி இன்பமாய் வேண்டுமா வாழ்வு??
விழித்திடு விழித்திடு மானிடா பழமை விரும்பி பாரடா
உணர்ந்திடு உணர்ந்திடு மானிடா பாரதம் இனிக்கும் நாடடா..!!
மக்கள் திரட்ச்சிகள் கூட்டுவது புரட்ச்சிகள் அல்ல
மக்களின் மீட்ச்சிகள் தேடி சாட்ச்சிகள் ஆவதே புரட்ச்சி என்பேன்..!!!!
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 6-Mar-15, 9:09 pm

மேலே