(டீ மாஸ்டரின் கவிதை.. பெயர் கூட சாெல்ல மறுத்தார்..பிறகு...
(டீ மாஸ்டரின் கவிதை.. பெயர் கூட சாெல்ல மறுத்தார்..பிறகு திரும்ப திரும்ப கேட்டதும் சொன்னார். ஒரு காலத்தில் கே.எஸ் ரவிக்குமாரிடம் கதை சொன்னாராம். அலுவலகத்திற்கு அவர் வரச் சொன்னாராம். இவர் வேறு வேலையிருக்கிறது என்று வந்துவிட்டாராம்... ஒரு கவிதை சொல்லுறேன்.. நீ எழுதுற மாதிரி போட்டுருனு சொன்னாரு.. அட சும்மா பேர சொல்லுண்ணேனு நீ தான் எழுதி இருக்கேனு போட்ருதேன்னு சொன்னேன்.. நல்ல மனிதர்.. நிறைய அனுபவங்களை பகிர்வார்..)
நினைவெல்லாம் நீ
நித்திரையெல்லாம் நான்
கனவெல்லாம் நீ
கண்திறக்க முடியாமல் நான்
உணவெல்லாம் நீ
உண்ண முடியாமல் நான்
வேறு ஒருவனோடு நீ
வேதனை யோடு நான்
மனைவியாய் நீ
மரணத்தின் மடியில் நான்.
--கே.பி.சிவராஜ் மணி(டீ மாஸ்டர்,மீனம்பாக்கம்,சென்னை...)