எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் காற்று இதய மேகத்தை குளிர்வித்த இந்த சோக...

காதல் காற்று
இதய மேகத்தை குளிர்வித்த
இந்த சோக ராகத்திற்கு
என் உணர்ச்சியின் கண்ணீர், வார்த்தைகளாய்

திரை;வெள்ளித்திரை
பாடல்;உயிரிலே
ராகத்தோடு தாகத்துடன் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!

மாற்று வரிகள் ...

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் வானில் விண்மீன்கள்
எனைப் பார்த்து சிரிக்குதோ!-அடி
எந்தன் சோகம் தாங்காமல்
குளிர் மேகம் உருகுதோ!

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் உயிராய் உனை நினைத்தேன்
காதலியே!
உனைப்பிரிந்து வாழ்வது ஏன்?
நான் தனியே!

எந்தன் வானம் அது இனி விடியாதென
என் எதிர் காற்று சொல்கின்றதே!
எந்தன் காலம் அது இனின் நீளாதென
என் உயிர் காற்றும் சொல்கின்றதே!

உன்னோடு வாழ்வதற்கே
பிறந்தேன் நானடி!- நீ
என்னை விலகி வாழ்வதுபோல்
துயரும் ஏதடி!

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

-கண்ணீருடன் சரவணா..

பதிவு : kavik kadhalan
நாள் : 2-Feb-14, 9:09 pm

மேலே