எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

31-05-2015...அம்மாவின் நினைவில்....(11) கவலுவான் மடியில் இட்டே ***கவலைநெஞ் சேற்று...

31-05-2015...அம்மாவின் நினைவில்....(11)

கவலுவான் மடியில் இட்டே
***கவலைநெஞ் சேற்று நிற்பாள்!
குவலயம் பழித்த போதும்
***கொஞ்சுவாள் அணைத்துக் கொள்வாள்!
சவலையர் நாமெல் லோர்க்கும்
***சாமிகை விட்ட போதும்
அவலமே தாங்கத் தந்த
***அருட்கொடை தாயே அன்றோ? 11
( கவலுவான்= கவலைப்படுபவன்;சவலையர் =இளங்குழந்தைகள்;)

31-05-2015...அம்மாவின் நினைவில்...(12)

திவலையர் பிள்ளை யானால்
***திரட்டிடும் கைகள் தாயே!
தவலை,அத் தாயால் அன்றோ
***தங்குவோம் ஒரு,கட் டிற்குள்!
துவலைகள் தாயா லன்றோ
***துறைகள்என் றாகப் போகும்!
சிவல்,அவள் சேர்த்த கற்கள்
***செய்,ஒலி குடும்ப மன்றோ? 12

(திவலை= சிதறும் துளி; தவலை= அகன்ற வாயுடைய பாத்திரம்; துவலைகள்=மழைத்துளிகள்;சிவல்= கிலுகிலுப்பை;

==முற்றா நினைவுகள் முற்றும் பாக்கள், முற்றிடும் வாழ்க்கை =====

நாள் : 31-May-15, 5:34 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே