என் மரியாதைக்குரிய பேனாக்காரர்களே... என் ''இளைய பாரதம் எழுகவே''...
என் மரியாதைக்குரிய பேனாக்காரர்களே...
என் ''இளைய பாரதம் எழுகவே'' http://eluthu.com/kavithai/246912.html
என்ற படைப்புக்கு நீங்கள் அளித்துள்ள
வரவேற்பும் கருத்துகளும் என்னை வியக்கவைக்கின்றன.
இந்தப் பெருங்கடலில் ஒரு துளியாக கலக்கிறேனே
என்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என்ற சிறு நடுக்கம்
என் நெஞ்சில் நின்றது உண்மைதான்
ஆனாலும் அந்த எண்ணம் எனக்குள் இருந்ததையே நீங்கள் மறக்கவைத்துவிட்டீர்கள்.
உங்கள் கருத்துகளால் இன்னும் ஒரு 200 ஆண்டுகள்
என்னால் பேனாபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறேன்.
இத்தனை பேனாக்காரர்களை ஒரே தளத்தில்
கட்டிவைத்திருக்கிற ''எழுத்து''க்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்.
இரண்டு பெறும் வேண்டுகோள்களை உங்கள் முன் வைக்க நினைக்கிறேன்.
1 நம் தளத்தில் படைப்புகளுக்கு கருத்துரைக்கும் சிலர் மதிப்பென் அளிப்பதில்லை என நினைக்கிறேன்.
நீங்கள் அளிக்கும் கருத்து படைப்பாளனை ஊக்கப்படுதுகிறது உண்மைதான் ஆனால் மதிப்பென்தான் அவனை மற்றவர்க்கு அறிமுகப்படுத்துகிறது. ஆகவே உங்கள் மதிப்பென் ஒவ்வொரு படைப்புக்கும் படைப்பாளனுக்கும் முக்கியம்.
2 வாசித்து நேசிக்கும் படைப்புகளை நம் நண்பர்களுக்கும் பகிரவேண்டும் மதிப்பென்னை விட இச்செயல் மிகமுக்கியம். நம் தளத்தில் பகிர்தலும் குறைவாகவே உள்ளதாகவே நினைக்கிறேன்.
உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என் வார்த்தைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
என் கவிதைகளுக்கு தொடர்ந்து உங்களின் ஆதரவும் கருத்தும் வேண்டும்
உங்கள் படைப்புகளையும் எனக்குப் பகிருங்கள் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
நேசம் கலந்த நன்றிகளுடன்
--------------------------------கவியமுதன்.