எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாங்கா சாதம் செய்வது எப்படி? தேவையான பொருள்கள்: உதிர்...

மாங்கா சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:
உதிர் உதிராக வேக வைத்த சாதம்
மாங்காய் -1
இஞ்சி
நல்லெண்ணெய்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
வேர்கடலை
தாளிக்க - கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய்-4
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி மற்றும் மாங்காயை தோல் நீக்கி, நன்கு பொடிப் பொடியாக சீவிக் கொள்ளவும். வாணலியில் வேர்கடலை, கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய் ஆகியவற்றை போட்டு, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். தாளித்த பொருள்கள் மீது மாங்காய், இஞ்சி, மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி போட்டு நன்கு வதக்கவும். ஓரிரு நிமிடங்கள்மூடி வேக வைத்துவிட்டு சாதத்தை நன்கு உதிர்த்து சேர்க்கவும். சாதம் உடைபடாமல் நன்கு கிளறவும். இறக்கி வைத்து சற்றே சூடு ஆறியதும் வாழை இலையில் பரிமாறவும். வாழைக்காய் அல்லது நேந்திரம் சிப்ஸ் தொட்டுக் கொள்ளலாம்.

தகவல்கள்:
மாம்பழத்தை விட, மாங்காயில் விட்டமின் 'சி' சத்து அதிகம்.
மாங்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது.
நம் ஜீரண உறுப்புகளுக்கு மாங்காய் மிகவும் நல்லது.
மாங்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், Cholesterol அளவை குறைக்கும்.
ங்காய் துண்டுகளை உப்பில் தோய்த்து சாப்பிடுவது, sun strokeலிருந்து நம்மை காக்கும்.

பதிவு : Abitha
நாள் : 3-Sep-15, 1:17 pm

மேலே