எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிர் தந்த தாயையும் உதிரம் தந்த தந்தையும் மீறி...

உயிர் தந்த தாயையும் 
உதிரம் தந்த தந்தையும் 
மீறி புறப்பட்டது காதல் 
அவளை பார்த்த நாள் என் மனதில் 
அழியாத நாள்
love in first sight நான் கூட உணர்ந்த நாள் 
அவளை கண்ட பொழுது பின்னணி இசை இல்லை 
அவள் பின்னால் நான் இருந்தேன் ...
என் கால் நூற்றாண்டு வாழ்கையை அவள் 
கால் கொலுசுகளில் பூட்டினாள்....
பெருந்தலைவர் புரத்திலிருந்து 
புறப்பட்டு வந்தது அந்த தென்றல் .....
வறண்டு கிடந்த எந்தன் தொண்டை குழிக்குள் 
வந்து விழுந்த பாலாறு ...
தினந்தோறும் தெய்வ தரிசனமாய் 
அவள் வருகை .....
கடிகார முள்கள் என்னை போலவே ஏங்கும்
அவள் வருகையை பார்த்து ....
முள்கள் முட்களாய் குத்தும் சில நிமிடங்கள் ...
வருவாள் தேவதை ...
விரைவான நடை 
மிடுக்கான பார்வை 
துடுக்கான பேச்சு ...
அடடா காத்திருப்பு இத்தனை சுகமானதா!
நொடிப்பொழுது உன்னை காண ஒரு ..
இரவுப்பொழுது காக்க வைத்த பெண்ணே ....
வராது வரக்கூடாது என நினைத்த நோய் வந்தது ,....
ஹார்மோன்களின் சேட்டை என்கிறது அறிவியல் ...
என்னவளின் தரிசனம் என்கிறது என்னியல்....
உயிரெழுத்துகள் 12 ஆம் யார் சொன்னது ?
உன் பெயர் வெறும் 3 எழுத்துகள் தானே ...
தினம் தோறும் மாலையில் நடை பயணம் 
உனக்காக மட்டுமே ..
என்னை கடக்கும் வினாடியில் ...
பைக் கண்ணாடியின் ஓரம் பார்ப்பாய் ஒரு கணம் 
அது தானே என் தவம் .....
தேரின் பின்னே வரும் பக்தனாய் 
உன் வாகனம் தடம் தொட்டு வருவேன் ...
முன்பு எப்பொழுதும் எதிர்காலம் பற்றிய சிந்தனை 
இப்பொழுது எதிர்காலமே உன்னுடன் என்ற சிந்தனை ....
எதார்த்தமாய் கொடுத்த சாக்லேட் துண்டுகளை 
திருப்பி கொடுத்து விட்டாய் ....
நீ கொடுத்தது சாக்லேட் துண்டுகள் அல்ல ...
உடைந்து போன என் இதய துண்டுகள் ...
உன்னிடம் பேச துடிக்கும் என் இதயத்திற்கு 
உன் மௌனமொழி புரியவில்லை ....
முன்பெல்லாம் உயிரை விட மானம் பெரிது 
இப்பொழுதோ மானத்தை விட நீதான் பெரிது 
நீ உதாசீனப்படுத்தும்பொழுதெல்லாம் ...உன் 
உதாரண புருஷன் நான் என்றிருந்தேன் ...
உன்னிடம் பிடித்து போன விஷயம் 
எதுவென்று யோசித்தேன் ....
எல்லோரிடமும் நட்பு ...
இயல்பாய் பழகும் திறன் ..
தன் உணவை நட்பிற்கும் பகிரும் செயல் ..
எதிலும் வெளிப்படை தன்மை ..
கதாநாயகிகள் தோற்று போகும் ஏதோ ஒன்று ..
கற்பனை செய்து வைத்த அத்தனையும் 
அவள் வடிவில் ...
காதல் வெற்றி பெற்றால் சடங்காகிறது 
தோல்வி அடைந்தாள் காவியமாகிறது ...
நோஞ்சான் என்னை கவிஞனாக்கினாய் 
கவிஞனை என்று ------------
என் விரல் பிடித்து நடப்பது 
நீ என்றால் மரணமே வந்தாலும் துணிந்து நிற்பேன் 
நீ பேசாத ஒவ்வொரு நொடியும் 
எனக்குள் தோன்றும் 
உயிர் வாழ்வதற்கான ஆதாரம்..
உயிர் வாழ்வதை விட கொடுமையானது ..
உன்னை நினைத்து சிந்திய கண்ணீர் துளியில் 
உன் முகம் ....
உனக்கு பிடிக்காத என் முகத்தை கண்ணாடியில் கண்டால் 
உன் முகம் ...
அதிகாலை கனவுகளில் உன் முகம் ...
என் மடிக்கணினி திரையில் உன் முகம் ..
என் யோசனை திறனில் உன் முகம் ...
என் அறைகள் முழுக்க உன் முகம் ...
என்று காண்பாய் என் முகம் ??????????????
என்னை நம்பும் தாய் தந்தைக்காக
பருவத்தீ இரண்டு அணைந்தது ...

நாள் : 27-Sep-15, 12:21 pm

மேலே