“கனவே கலைந்து போ ” என்ற எனது தொடர்கதையின்...
“கனவே கலைந்து போ ” என்ற எனது தொடர்கதையின் நான்காம் பாகம் இரவு இரண்டு மணிக்கு நடக்கும். அந்த நேரத்தின் சூழ்நிலையை உள் வாங்க இரவு இரண்டு மணிக்கு தனியாக உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். eகலப்பை போட்டு டைப் செய்து கொண்டிருந்தபோது “ஆ” எழுத்து ரிலீஸ் ஆகாமல் நின்று விட்டது. அவ்வளவுதான். இரண்டு பக்கத்துக்கு ஒரே ஆ... ஆ.. ஆவாக நிற்காமல் மானிட்டரில் ஓட ஆரம்பித்து விட்டது....! பிறகு ஆ”வின் தலையில் இரண்டு போட்டு நிறுத்தினாலும், சே..! நன்றாக பயந்து போனேன்.....!