நான் யார் ? புதுமைப் பெண்ணாக வாழ நினைக்கும்...
நான் யார் ?
புதுமைப் பெண்ணாக வாழ நினைக்கும்
என்னை - முட்டாள் என்கின்றார்கள்
இளகிய இதயம் கொண்ட என்னை -
ஏமாளி என்கின்றார்கள்
உண்மைகளை கூறினால் என்னை -
அதிக பிரசிங்கி என்கின்றார்கள்
கொஞ்சம் ஓய்வெடுத்தால் என்னை -
சோம்பேறி என்கின்றார்கள்
ஆதரவற்றோருக்கு உதவி செய்தால் என்னை -
செலவாளி என்கின்றார்கள்
உலகம் உருண்டையானது என்பது கூட
தெரியாத இவர்கள்
நான் யார் என்பதை மட்டும்
தெரிந்து கொள்ளவா போகின்றார்கள் ??????