எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரூபாய் நோட்டு மாயமில்லை மந்திரமில்லை, காணும் மாற்றம்யாவும் நிஜம்தானே!...

         ரூபாய் நோட்டு           



மாயமில்லை மந்திரமில்லை, காணும்
மாற்றம்யாவும் நிஜம்தானே!

அறிமுகமானது புதிய ரூபாய்நோட்டதனால்,
காணாமல் போவது கைபட்டுக் கசங்கிய கட்டுநோட்டுகளெல்லாம்

காகிதம் பணமாகியது. . . . அன்று, மறுபடியும்
காகிதமாவதும். . . . ஆச்சர்யமும் இன்றுதான்

காந்தியின் முகத்தை உன்மீது காணமுடியும். . . . அன்று
அவரணிந்த கண்ணாடி கூட தனியே தெரியும். . . . இன்று

எப்போதும் விலை பேசும் உன்னை, 
இப்போது விலையேதுமில்லாமல், விதி மாற்றமொன்று
வீதிக்குக் கொண்டுவந்தது. . . . இன்று

பணக்காரன் கழுத்தில், பணமாலை ஆனாய். . . . அன்று
பிணமாலை வாங்குவதற்குக் கூட தகுதியில்லை. . . . இன்று

கல்லரைக்குச் சென்றால் கூட, பணமில்லாமல் செல்லலாம். . . அன்று
சில்லரையோடுதான் செல்லவேண்டும். . . இன்று

எங்கும் ஒளிந்திருப்பேனென்று சூளுரைத்தாய். . . . அன்று
ஒரிடத்தில் மட்டும்தான் உறைவேன்கிறாய். . . . இன்று

எங்கிருப்பான் இறைவன் என்ற கேள்விக்கு?
"எங்குமிருப்பான் இறைவன்! என்ற பதிலைப் போன்று
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த உனக்கு,
சுத்தமாக வங்கியில் மட்டும்தான் வாழ்நாள் சிறைவாசம்

கம்பு, கூழ் குடிப்பவனும் மகிழ்கிறான் உனது மாற்றத்தினாலின்று
கடத்தல்காரனும்,கலப்படக்காரனும் கலங்கியிருக்கிறான். . . .இன்று

உழைப்பேதும் இல்லாமல், உன்னைவைத்து
உண்டு பெருத்த பெருச்சாளிகள், இனி உன்னை
ஓரிடத்தில் ஒளித்து வைக்க இடமில்லை, என்று சொல்ல
கொண்டுவந்த மாற்றம்தான், இதுவென்றால்
குற்றமொன்றுமில்லையடி

மாற்றம் கொண்டுவருவேன் உன்னைவைத்து
என்றுரைத்தானொருவன் அன்று, இப்போதுன்னை
மாற்றுவதற்கு அலையவிட்டான் அவனே. . . . இன்று

பாரதத்தின் பெருமை சொல்ல பாருலகில் நரேந்திரனென அன்றொருவன் தோன்றினான்

ஆதார் இல்லையெனில்
"ஆதாரம் இல்லையம்மா" என்று சொல்லி
அதிரடி மாற்றங்கள் பலசெய்து, முன்னொருவனின்
அவதாரமாய் திகழ்கிறான் இன்றொருவன். . 

அன்புடன் பெருவை பார்த்தசாரதி.

நாள் : 10-Nov-16, 7:11 pm

மேலே