எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கான மகளிர்தின பூங்கொத்து தயாராய்..... மகிழ்ச்சியில் ஓடோடிப் பெற்றால்...

எனக்கான மகளிர்தின பூங்கொத்து தயாராய்.....
மகிழ்ச்சியில் ஓடோடிப் பெற்றால் அலைகிறாய் என்பாய்.....
ஒரு சென்டிமீட்டர் அதிகமாய் சிரித்துப்பெற்றால் வழிகிறாய் என்பாய்......
கைகொடுத்து சின்னதாய்அணைத்தாலும் 'அவள் ஒரு மாதிரி' யென ஒரு மாதிரி சொல்வாய்.....
உணர்வை வெளிப்படுத்தாமல் நன்றிமட்டும் சொன்னால் திமிர் என்பாய்......
பூங்கொத்தே வேண்டாம் வாழ்த்துக்கள் போதுமென்றால் தலைக்கணம் என்பாய்....
என்செய
என் சமூகமே......

பதிவு : முகில்
நாள் : 8-Mar-18, 9:17 am

மேலே