எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மது குடித்து தந்தை மயங்கி கிடக்கிறார்... மயங்கியவரின் மகன்...

மது குடித்து தந்தை மயங்கி கிடக்கிறார்...
மயங்கியவரின் மகன் மரணித்து கிடக்கிறான்...
வாழ வேண்டிய வயதில் வாழ்வை தொலைத்து விட்டான்...
சமுதாயத்தை மீட்க சபதம் எடுத்து உயிரை விட்டு விட்டான்...
சாதிக்க வேண்டிய வயதில் சாக துணிந்து விட்டான்...
திருப்பு முனை ஏற்படும் வயதில் தமிழ் நாட்டை திரும்பி பார்க்க செய்து விட்டான்...
துள்ளி விளையாடும் வயதில் தூக்கில் தொங்கி விட்டான்...
சாராயம் என்னும் சாக்கடையால் சாதிப்பதை நிறுத்தி விட்டான்...

மதுவே மரணித்து போ...
மக்களை மரணிக்க தூண்டாதே...
அரசே மது விலக்கிற்கு ஆணையிடு...
மக்களை என்றும் பாதுகாத்திடு...

*வலியின் வரிகள்...*
*சி.முத்தரசு.,*

நாள் : 7-May-18, 2:34 pm

மேலே