எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பைப் பற்றி... கடவுளின் சிலைகளில் சில கிழக்கு நோக்க,...

அன்பைப் பற்றி...

கடவுளின் சிலைகளில் சில கிழக்கு நோக்க,
சில மேற்கு நோக்க,
சில தேற்கு நோக்க,
சில வடக்கு நோக்க,
எத்திசை நோக்கி நீ கண்ட கடவுள் இருக்கிறார்? என்று கேட்கப்பட்டது.

நான் கண்ட கடவுள் அன்பு தானே.
அன்புக்கு திசையே இல்லை.
எத்திசையும் அன்பின் அரசாட்சி ஆற்றலாய் இயக்கிக் கொண்டிருக்க, இத்திசையில் மட்டுமே அன்பு இருக்கிறது என்று கூறுவதே மடமை.

அருட்பிரகாச வள்ளலார் அறிவு குறிப்பால் உணர்த்திய தீப ஒளியே தெய்வமென்ற சத்தியம் உணர்ந்து அறியும் போது அன்பு ஒரு தீபம் என்றே விளங்க,
தீபத்தை சூழ்ந்துள்ள அனைத்தும் வெளிச்சமென்ற பயனை அடைவதைப் போல,
அன்பை சூழ்ந்துள்ள அனைத்தும் அறிவுச் சுடர் ஏற்றமுற பயனடைவர்.

மீதியை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நாள் : 30-May-18, 9:38 am

மேலே