எண்ணம்
(Eluthu Ennam)
வெறுமை, வறுமை இரண்டும் மட்டுமே ஞானத்தை வாரி வழங்கக்கூடியவை. பணம் மட்டுமே உங்கள் நேசிப்பு எனில் இது உங்களுக்கு புரியாது.
மனம் நாட, விழிகள் தேட,
அன்பைப் பற்றி...
கடவுளின் சிலைகளில் சில கிழக்கு நோக்க,
சில மேற்கு நோக்க,
சில தேற்கு நோக்க,
சில வடக்கு நோக்க,
எத்திசை நோக்கி நீ கண்ட கடவுள் இருக்கிறார்? என்று கேட்கப்பட்டது.
நான் கண்ட கடவுள் அன்பு தானே.
அன்புக்கு திசையே இல்லை.
எத்திசையும் அன்பின் அரசாட்சி ஆற்றலாய் இயக்கிக் கொண்டிருக்க, இத்திசையில் மட்டுமே அன்பு இருக்கிறது என்று கூறுவதே மடமை.
அருட்பிரகாச வள்ளலார் அறிவு குறிப்பால் உணர்த்திய தீப ஒளியே தெய்வமென்ற சத்தியம் உணர்ந்து அறியும் போது அன்பு ஒரு தீபம் என்றே விளங்க,
தீபத்தை சூழ்ந்துள்ள அனைத்தும் வெளிச்சமென்ற பயனை அடைவதைப் போல,
அன்பை சூழ்ந்துள்ள அனைத்தும் அறிவுச் சுடர் ஏற்றமுற பயனடைவர்.
ம (...)
என்னைச் சிந்திக்கத் தூண்டிய வசனம்:-
" அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம்,
பொறுப்பற்ற சமுதாயம் என்னும் இந்தக்கொடுமைகள் இல்லாத நல்ல நாளை
எதிர்பார்த்துத் தொண்டு
செய்கிறவனே வீரன்.
அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன்.
அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம்.
ஆனால், எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை.
இன்றே எண்ண முடியும் அல்லவா?
இப்போதே எண்ண வேண்டும் அல்லவா?
எண்ணுவதற்கு ஒரு
துணிவு - வீரம் - வேண்டும்.
அந்தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி.
அவன் என்ன எண்ண வேண்டும்?
அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற
நிலைகளுக் (...)