எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா வெள்ளையில உருவானே! அம்மா இருட்டறையில கருவானே! அறைகுறையா...

அம்மா

வெள்ளையில உருவானே!
அம்மா இருட்டறையில கருவானே!
அறைகுறையா நான் முளைக்க
ஆறு மாசம் ஆச்சம்மா..
அம்மனமா நான் பிறக்க 
ஒரு திங்கள் ஆச்சம்மா..
ஒட்டி நானும் இருந்தேனே 
தொப்புள் கொடியில நான் ஒட்ட...
புத்துலகு நான் பார்க்க
பூங்கொடி அத நீ வெட்ட..
அம்மானு நா கத்த 
என்ன அன்பால அனச்சுப்புட்ட...
அழுதுகொண்டே சிரிச்சுபுட்டு 
கண்ணீருல நனச்சுபுட்ட
உன் அரவணைப்ப பாத்துப்புட்டா மழைகூட
எனத்தொடாது...
தெய்வமே! உன் கரம் பட்டா...
வெயில் கூட எனைச் சுடாது...
உன் உசுருல எனச் சேர்த்து
என் உசுர காத்தாயே!
மறுபிறவி ஒன்னு இருக்கு அதிலும் நீ என் தாயே!....
                 
 அன்பு

பதிவு : அன்பு
நாள் : 11-Oct-18, 10:27 am

மேலே