வரம் வேண்டுகிறேன் … ! திருட்டு பால்விழி நொடியில்...
வரம் வேண்டுகிறேன் … !
திருட்டு பால்விழி நொடியில்
அன்னப்பறவை ஆவேனோ ?
நெருப்பு கோபவிழி நொடியில்
பீனீக்ஸ்பறவை ஆவேனோ ?
நெற்றி வியர்வை நொடியில்
தென்றலென ஆவேனோ ?
பெட்டிக்குள் உறங்கிடும் நொடியில்
புதைகுழியென ஆவேனோ ?