ஏக்கமடி … ! வறண்ட நிலங்கண்ட உழவனானேன் !...
ஏக்கமடி … !
வறண்ட நிலங்கண்ட உழவனானேன் !
இருண்டஉன் விழிகண்ட நொடியில்…
திரண்ட மேகங்காண ஏங்கிடும்
நிலம்போல விழிகள் ஆனதடி !
உறங்கிடும் உன்விழி திறந்திட
ஏங்கிடும் என்கவி மொழியடி… !
வாடிடும் பயிரை தீண்டாத
மேகமங்கை ஆனாயடி !
வாடிடும் பயிரானேன் நானே !
மேகமங்கை உன்னை காணாது…..
புயலென வருகிறாள் மேகமங்கை
பருவமழை பொழிந்திட என்றும்
கயலென விழிகொண்டு கன்னி
பருவகவி பொழிந்திட என்மீது ….