மது உண்ட கிறக்கம்தரும் மாது உந்தன் கண்னழகில் .......
மது உண்ட கிறக்கம்தரும்
மாது
உந்தன் கண்னழகில்....
வில் புருவம் தூக்கி நீயும்
கருவிழியை உருட்டி உருட்டி
கோடிபேர்கள் நடுவினிலே....
என்னை
நீயும் தேடையிலே .....
அடிவயிற்றில் குறுகுறுக்கும்
என் இதயம் பதபதைக்கும்
உன் விழி வீசும் தூண்டிலினில்
மாட்டிக்கொண்ட சிறுமீனாய்
துடிதுடிக்கும் என் இதயம்
குளிர்வீசும் வெண்நிலாவும் அனல் வீசும்
செங்கதிரும் ஒருசேர வீசுதடி .....
காதல் பார்வை ஒரு கண்ணில்
கோவப்பார்வை மறுகண்ணில்
குளிர்கின்ற
வெப்பமொன்று என்னை வந்து தாக்குதடி.....
நீ
இமைக்கும் அழகைக்
காண
இமைக்காதே
என் இமைகள் ....
உன் விழியும் என் விழியும்
ஒரு
நொடியில் பேசிவிடும் பலநூறு
காதல் கதைகள் ...
- விக்னேஷ் குமார்