என் ஆத்தாவே என்ன பெத்தவளே உன் கருவறையில என்ன...
என் ஆத்தாவே என்ன பெத்தவளே
உன் கருவறையில என்ன பத்து மாசம் சுமந்தவளே
பல வலிகள பொறுத்து என்ன இந்த உலகுக்கு அறிமுகம் செஞ்சவளே
நான் உன்ன பார்த்து சிரிக்கையில என்ன உலக அதிசயம் போல ரசுச்சவளே
உன் உதிரத்த பாலாக்கி என் பசிய போக்க துடுச்சவளே
நிலாவ காட்டி நீ சோறு ஊட்டயில
எனக்கு தெரியவில்ல நிலாவ விட நீ அழகுன்னு
நான் கண் உறங்க தன் கண் முழுச்சு
ஆரிராரோ தாலாட்டு பாடி என்ன தூங்க வெச்சவளே
நான் அம்மானு அழைக்கயில என்ன தூக்கிவாரி முத்தமிட்டு அணைச்சவளே
வானத்த பிச்சுகிட்டு மழை பெயுரப்ப என் மகன் நினைவானு வானத்த வைதவளே
நான் சொல்வது பொய்யினு தெரிந்தும் அதை அழகாய் ரசுச்சவளே
என் கண்ணுள தூசி விழுந்தா உள்ளம் எல்லாம் பதைத்தவளே
கோவத்துல அப்பா என்ன அடிக்கையுள என் மகன் பாவமுன்னு அப்பாவ முறச்சவளே
விதவிதமா நீ சமச்சு போட்டாலும்
உன் கையால் உன்னும் ஒரு பருக்க சோறு சக்கரையா இனிக்குதம்மா
இந்த உலகில் என்னை உன்மையாய் நேசிக்கும் நெஞ்சம் கொண்டவளே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
நான் உன்னிடம் பட்ட கடன் தீராதம்மா♥!!