முகமது நபியே..! முழுமதி ஒளியே ..! ஒருமுறை வந்தால்...
முகமது நபியே..!
முழுமதி ஒளியே ..!
ஒருமுறை வந்தால் போதுமே ..!
என் வாழ்வே வானவில் ஆகுமே..!
அகமது நபியே..!
அன்பின் விழியே ..!
என்னை ஒருமுறை பார்த்தால் போதுமே ..!
என் உயிர் உம்மை சேருமே ..!
அந்த மண் செய்த தவம் தான் என்னவோ ..!
உம் பொன்னான மேனியை சுமக்கிறதே..!
இந்த கண் செய்த பாவம் தான் என்னவோ..!
உம்மை காணாமல் புண்ணாக வலிக்கிறதே ..!
வான் பிறையாய் உம் பற்கள் ஒளிர ..
தேன் நிறையாய் இறை சொற்கள் மிளிர..
ஒருமுறை கேட்கும் வரம் கிடைக்காதோ..?
என் செவி குளிர ..!
நீர் தவம் புரிய வேண்டும் என்று அந்த ஹீரா குகை எத்தனை யுகம் தவம் புரிந்ததோ..!
நரை எல்லாம் கதறும்...
நமக்கு ஏதோ குறை என்று..!
அறுபது தாண்டியும்
இருபது கூட
நாயகத்திடம் நெருங்க முடியவில்லையே அன்று ..
விண்ணில் தவழும் மேகம் ..
மண்ணில் கமழும் உங்கள் முகம் கண்டு...
கண்ணில் நீரை சிந்தும் ..!
நான் தழுவ வழி இல்லையே என்று ..!
அந்த நிலவும் ஒளிந்துவிடும் ..
நீர் உலவும் வீதியிலே ..!
மலர்ந்த மலரும் மூடிக்கொள்ளும்...
உம் வாசம் வீசுகையிலே..!
வான் புகழை என்ன சொல்லி
நான் புகழ்வேன்..?
வார்த்தைகள் இல்லை.. உலகமொழிகளில் இன்று!
கர்த்தாவே புகழ்ந்து விட்டான்..
முழுவதுமாய் முஹம்மத் என்று!