எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*ஒரு நாள் கூத்து* புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர உணவகம்...

*ஒரு நாள் கூத்து*

புதிதாக திறக்கப்பட்ட நட்சத்திர உணவகம் அது. தினமும் நான்  கல்லூரிக்கு செல்லும் வழியில் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிபார்த்தப்படி செல்வேன். மாருதி கார்களும், மாளிகையில் வாழும் மனிதர்களும் வந்து போகும் உணவகம் அது. கனவிலும் கூட என்னால் சென்று வர முடியாத அந்த உணவகத்திற்கு நான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அன்று.

விடுமுறை நாள் என்பதனால் நானும் என் நன்பர்களும் விஸ்வாசம் படம் பார்த்து விட்டு பசியோடு பாவமான தோற்றத்தில் அந்த பைபாஸ் சாலை ஓரத்தில்.... நேரம் கடக்க கடக்க கால்கள் சுடச்சுட அந்த வேகாத வெயிலிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வேகமாக ஓடியபடி சாலையின் இருபுறமும் ஓர்  சிறிய உணவகம் ஏதேனும்  தென்படுகிறதா? என உற்று நோக்கி கொண்டே கால்கள் பறந்தன. சுதந்திரமாக இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் பறவையாக பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணியது உண்டு. ஆனால், அன்று நான் அந்த வெயிலில்  ஓடும்போது தான் பறவையின் பசி வலியையும் கூட உணர்ந்தேன்.

அனல் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு நறுமணம் வீச தொடங்கிற்று. திரும்பினால் கம்பீர தோற்றத்துடன் அந்த புதிய நட்சத்திர உணவகம். நான் அங்கிருந்த வாட்ச்மேனிடம் மற்ற உணவகத்திற்க்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? எதற்காக இங்கு மட்டும் மக்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என கேட்க, அவனும் ஆட்காட்டி விரலை வலதுபுறமாக மேல்நோக்கி நீட்டினான். அதை தொடர்ந்து, பாரம்பரிய  உணவு இங்கு கிடைக்க பெறுவதாக அங்கு மாட்டப்பட்டிருந்த  வாசகபலகையில் எழுதப்பட்டிருந்தது. அதாவது அன்றைய காலத்தில் உணவு முறைகள் இயற்கையின் வழியில் பின்பற்றபட்டதாம். அதை இப்போது பேஷனாக இவர்கள் பின்பற்றுகிறார்களாம். பசியின் தாக்கம் அதிகம் இருந்தபடியால்  என்னையும் உள்ளே  அழைத்து சென்று விட்டார்கள். "நான் எப்படி இங்கு வந்தேன்.....என்னால் நம்ப முடியவில்லையே...." என மனத்திற்குள் புலம்பிக் கொண்டே மேலும் கீழுமாய் அங்கு வரையப்பட்டிற்கும் ஓவியக்கலைகளையும், கட்டிடக்கலைகளையும் கண்டு வியந்தேன். திடீரென்று என் முன்னால் வந்து ஒருவர் "சார்....வாட் டூ யூ வான்ட்?" என்னுடன் வந்தவர்கள் எங்கே....? என தேடி கொண்டே.... நீண்ட வரிசையாக காக்கி வண்ணத்தில் பல மேஜை நாற்காலிகள் அவற்றை எண்ணிக்கொண்டே...ஒன்று....இரண்டு....மூன்று....நான்கு....கடைசி இருக்கையில்  அவர்கள் எனக்கொரு இடத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு "இங்கு வா...அமரும்..." என கூறியபடி.

எனக்கு கீழே ஒரு அட்டை வடிவிலான ஒரு புத்தகம்.... உணவு வரும்வரை நேரத்தை கழிப்பதற்கு வைத்துள்ளார்கள்  என்றெண்ணி சிரித்தேன். என்னருகில் இருந்த நண்பர்கள் எல்லாம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை எடுத்து  மலமலவென ஒப்பித்து கொண்டிருந்தனர். சற்று விநாடியில் ஐ.டி.  கம்பேனியில் வேலை பார்ப்பவர் போல் டை, ஷு-வெல்லாம் அணிந்து "சார்....கேன் யூ கிவ் மீ தி ஆர்டர் ப்ளீஸ்??" அதன்பிறகு ஒருவர் முன்னால் ஒருவராக அடித்து கொண்டு தங்களுக்கு வேண்டியதை எல்லாம் கூறினர். நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மாணித்தனர். எனக்கு "நான் ரொட்டியும், பன்னீ பட்ட மசாலா" என்ற ஒன்றினை ஆர்டர் செய்தனர். இரண்டையும் சேர்த்தால் அதன் விலை ஜீ.எஸ்.டீ. வரி உட்பட முந்நூற்றையும் தாண்டுமாம். எனது தந்தையின் ஒரு வார வருமானம் அது. 'ரொட்டி தானே.....என்னவாகி விட போகிறது...' எங்கள் வீட்டு நாய் முத்துவிற்கு போடுவது போல் அதிகபட்சம் இருபது ரூபாய் தான் ஆகும் என்றிருந்தேன். ஆனால் அதன் விலையை பார்த்த பின்பு அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று எனது கால்கள் துள்ளின. டேபிளை க்ளீன் செய்ய வந்த அக்கா "நீங்கள் எல்லாம் எந்த ஊரு..?" ஊட்டி, நாமக்கல், சேலம், பொள்ளாச்சி என ஒருவராக சொல்லிக்கொண்டு வருகையில் நானும் 'அட நம்ம ஊரு தான் அக்கா!!' சிரித்து கொண்டே 'எங்க இராசா...?' நானும் சிரித்த படி "மேலவீதி" அவர்களும் "பக்கத்து தெரு தான், போ! " ஆசையில் "ஆனால் நான் உங்களை பார்த்ததே இல்லையே, அக்கா?" அவர்கள் முகம் சுருண்ட படி "வேல சரியா இருக்கும், தம்பி".

சாப்பாட்டு நேரத்தில்  தினமும் ஒரு கம்பேனி அழைப்பு வருவதுண்டு. அன்று அப்போது அது வந்தது. வழக்கம் போல் நான் அதை மறுத்து, கட் செய்து விட்டேன். என்னுடன் பேசி கொண்டிருந்த அக்கா "தம்பி....ஏதேனும் முக்கியமானவர்களாக இருக்க போகிறார்கள்" நான், "இப்போது.....நீங்கள் தான் எனக்கு முக்கியம்". எல்லோரும் சிரித்தனர். நானும் "இ...ஈ...ஈ...."

சரி தம்பி... நீ விசய் பேஃனா ??.....அக்கா...உனக்கு நூறு ஆய்ஸு கா !!....இல்ல, உன் போன் பின்னாடி விசய் நடிச்ச கத்தி பட போட்டோ  போடுருக்கியே அதான் கேட்டேன். அட  ஆமாக்க....எனக்கு விஜய் பிடிக்கும்னு இவங்க லாம் வாங்கி தந்தாங்க.... " யாருக்கு தான் விசய பிடிக்காது சொல்லு....." இதோ இவங்களுக்கு லாம் பிடிக்காதே... இன்னக்கி கூட விஸ்வாசம் படத்துக்கு என்ன கூட்டிட்டு போயிட்டாங்க....ஒரே தலவலி கா...உன்ட பேசுனதுல தான் வலி  போனுச்சே.....பின்ன எப்படி பா உனக்கு இவங்க லாம் விசய் படத்த வாங்கி தந்தாங்க?....அவங்களுக்கு என்ன பிடிக்கும்ல அதான்.... 'நட்பு கா!!' எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு டா  தம்பி....நன்றி, அக்கா.

பசியில் கத்திக் கொண்டிருந்த வயிரு குளிர்ந்த பிறகே,  நாங்கள் ஆர்டர் செய்தவைகள் ஆவிபறக்க வந்தன. அறக்க பறக்க அனைவரும் சாப்பிட, நான் மட்டும் அறையும் குறையுமாக அங்கு  சாப்பிட்டு கொண்டிருந்தேன்.  வயிறு நிரம்பியதோ? இல்லையோ? ஆனால் அன்று என் மனம் நிறைந்தது. அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்றிருந்த என்னை,  மன விருந்து அளித்து பசியை போக்கினார்கள் அந்த பெண்மனி. என்னை போலவே அவர்கள் முகத்திலும் ஓர்  ஆனந்தத்தை கண்டேன். இத்தனை நாளாக உள்ளேயே அடைந்து கிடந்து உணவகத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டவர்கள், செல்வந்தர்கள் யாரிடமும் மனம் விட்டு பேச முடியாமல் சிக்கி தவித்து கொண்டிருந்த சிரிப்பு  சில்லரையாய் இன்று வெடித்து சிதறிற்று அல்லவா. அந்த உணவகத்திற்கு செல்லும் போது வாசலில்...எனக்குள் ஒருவன், "டேய்! நானும் பணக்காரனே!!" அவர்களை சந்தித்தபின் அந்த உணவகத்தில் இருந்து வெளியேறும் போது அதே வாசலில் அவனே..."இன்று,  நானும் அதிஷ்டக் காரனே!!" வாட்ச்மேன் சிரித்து கொண்டே தலையாட்ட நானும் தலையசைத்துக் கொண்டே அன்று வீடு திரும்பினேன்.
            நன்றி,
                          -முத்து.

பதிவு : முத்து
நாள் : 5-Jul-20, 10:34 am

மேலே