எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரசவ வலியில் ஓர் பெண் கதறும் சத்தம், அருகில்...

பிரசவ வலியில்
ஓர் பெண் கதறும் சத்தம்,
அருகில் அவள் வலியை காண
மனமின்றி கதறும் கணவன்,
சற்று நேரத்தில் ஓர் உயிர் உலகத்தில் தரிக்க போகின்றது,
பிறக்கும் குழந்தை பெண்ணாக வேண்டுமென தகப்பன்
நான் பட்ட துயரம் பட வேண்டாம் எனக்கு மகன் வேண்டுமென தாய்
என் மகனுக்கு வாரிசு வேண்டுமென மாமனார் - மாமியார்
கடவுளே என் மகள் வலி தாங்க மாட்டாளே என
இன்னொரு பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணை பெற்ற தாய்
மகளையும் பேர குழந்தையையும் காண துடிக்கும் பெண்ணின் தந்தை
ஒருவகையில் தாயாகவும் தந்தையாகவும் பாசம் காட்ட காத்திருக்கும் தாய்மாமன்
சுமக்காவிட்டாலும் தானும் ஒரு தாயாக மாறிய பெண்ணின் சகோதரி
இப்படி குடும்பமே காத்திருக்க இதோ வர போகிறது அந்த உயிர்..
மருத்துவச்சியோ வாயிலை 
பலமுறை கடந்து கடந்து செல்ல
காத்திருக்கும் அனைவருமே 
பரபரப்பின் உச்சத்தில்,
மருத்துவச்சி கூறிய பதிலோ 
இன்னும் பெண்ணுக்கு 
முழு வலி வரவில்லை என்று
இதை தாண்டிய வலி உண்டா என எண்ணும் பொழுதே
கதறும் பெண்ணின் குரலை கடந்து காதில் ஒலித்தது சிசுவின் குரல்
இத்தகைய ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 
அந்த உயிரை பெற்றெடுத்த 
அந்த பெண் அல்லவா கடவுள்
உயிர் பிரசவிக்கும் வலியை 
பெண் மட்டுமல்ல 
ஆணும் உணரலாம் 
அவள் அருகில் நின்றாலே...
உணர்ந்தவன் எவனும் பிற பெண்ணை வன்புணர்வு செய்ய மனதாலும் நினைக்க மாட்டார்....
பெண்ணியம் காப்போம்...
பெண்மை போற்றுவோம்....


எழுத்துரு எண்ணங்கள்
பா.மாதவன் இராசமன்னார்குடி

நாள் : 15-Apr-21, 10:31 pm

மேலே