அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ - அன்னை தெரசா ===============================================...
அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ - அன்னை தெரசா
===============================================
உதவி செய்தல் இவர் பணி
உதவும் கரங்கள் இவர் அணி
உதவும் எண்ணம் என்னும் வண்ணம்
உலகம் முழுதும் பூசிய தாரகை!
முகத்தின் சுருக்கம் அழகைக் கூட்டும்
முகத்தின் கனிவு அன்பைக் காட்டும்
முகத்தின் சிரிப்பு துன்பம் ஓட்டும்
முழுதாய் அர்ப்பணித்த உயர்ந்த காரிகை!