கனவு நாடகம்..!!!

அவளை பார்த்து
கவிதைகளே வாய்மூடி
நிற்கும் போது,
நான் மட்டும்
அவளை பற்றி கவிதையாக
எப்படி சொல்வது...???
என சொல்லி கொண்டிருக்கும் போதே,

என் உதடு அவளை பற்றி
பொய் சொல்ல துடிக்க,
என் கண்கள் அவளிடம்
விளையாடி முடிக்க,
நான் ஒன்றுமறியாதவன் போல்
தெரியாமல் நடிக்க..!!!

நான் விரும்பிய நிஜ நாடகம்,
கனவில் மட்டும்
கை கோர்த்து
நிழலாக மறைந்துவிட்டது...!!

எழுதியவர் : மனோ ரெட் (18-Jan-13, 4:06 pm)
பார்வை : 191

மேலே