தோல்வி நிலையென நினைத்தால்...!!!
தோல்வி என்பது,
போட்டியின் முடிவல்ல
வெற்றியின் தொடக்கம்..!!
தோல்வி என்பது,
ஒன்றும் தெரியாது என்பதல்ல,
புதிதாக தெரிந்துகொள்வதின் நுட்பம்..!!!
தோல்வி என்பது,
தலை குனியும் அவமானமல்ல,
பெருமை கொள்ளும் அடையாளம்..!!
தோல்வி என்பது,
வெக்கப்படும் கோழை அல்ல,
வெல்ல துடிக்கும் வீரம்..!!
தோல்வி என்பது,
முள் குத்தும் பாதை அல்ல,
முன்னேற வைக்கும் பாடம்..!!
தோல்வி என்பது,
மிரள வைக்கும் பூதம் அல்ல,
முன்னேற கை பிடிக்கும் தேவதை..!!
தோல்வி என்பது,
துன்பத்தின் அழுகை அல்ல,
தூங்க விடாத போதை..!!
தோல்வி என்பது,
கிழிந்த புத்தகம் அல்ல,
வரலாற்றின் பக்கங்கள்..!!!
தோல்வி என்பது,
பின்னோக்கும் பயம் அல்ல,
வெற்றிக்கு அருகில் சென்ற துணிவு..!!
தோல்வி என்பது,
முட்டாள்களின் தலைவன் அல்ல,
அறிவாளிகளின் ஆசிரியர்..!!
தோல்வி நிலையென நினைத்தால்
வெற்றி என்பது வெறும் வார்த்தை தான்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
