நற்றுணை

நற்றுணை

தனிமையில் துணையென வந்தாய்

என் மனதை இறுக பற்றிக் கொண்டாய் !!!

உன்னுள் கட்டுண்டேன் நானும்

உலகையே மறக்கச் செய்தாய் !!!

அமைதியாய் தான் இருந்தாய் நீ -

ஆனால் என் மனதில் தான்

நீயும் ஏற்படுத்தினாய்

ஆயிரமாயிரம் சலசலப்பு !!!

என் கைகளுள் நீ

தஞ்சமடையும் வரை

அறியவில்லை - என்னை

இந்த அளவு வசீகரிப்பாயென்று !!!

என்னை விட்டு இம்மியும்

நீ நகர்ந்ததுமில்லை !!-என்னை

நகர விட்டதுமில்லை !!!

கவசமாய் உடனிருந்தாய் !!!

ஓர் நாளும் என்னை

நீ வஞ்சித்ததும் இல்லை !!

வஞ்சனை என்ற சொல்லை

நீ அறிந்திருக்கவுமில்லை !!!

உன்னைப் போல் உற்ற துணையை

நான் கண்டதுமில்லை !

இனி காணப்போவதுமில்லை !!

நற்றுணையான புத்தகமே !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (22-Apr-13, 3:30 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 153

மேலே