தேடும் வெற்றியே...

உனக்கான தயார்படுத்தல்களில்
எப்பொழுதும் தோற்றுப்போகிறவளாகவே இருக்கிறேன்!!
ஏழுகடல் மலைகள் தாண்டிய குகையில் அடைப்பட்ட
புதையல் என என்னை அலைக்கழிக்கிறது
உனக்கான எனது தேடல்....
என் நிறைதலுக்கான தருணம்
உன்னோடே நிகழக்கூடுமெனவே -நம்புகிறது
பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்....