அறிவியல் வியக்கும் அழகி...!!!

மரபு சார்ந்த கோட்பாடுகளின்
விதிகளை மீறியது நான் படைத்த
அவளின் அழகு...!!

இயற்கைக்கு ஒவ்வாத
இலக்கணங்கள் பல கொண்டு
இயற்றிய பௌதீக அழகி அவள்..!!

அவளின் மின்னல் பார்வை
மின்காந்த விசைக்கு சவால்..!!

அவளின் அலைவரிசை சிரிப்பு
அதிர்வெண்களில் சிக்கிடாத முரண்பாடு..!!

அவளின் புருவங்கள் கொண்டே
நேரெதிர் துருவங்களின் இயக்கம்..!!

அவளின் கற்பனை முன்
ஒளியின் வேகம் தாமதப்படும்..!!

அவளின் முகக்கண்ணாடியே
ஒளிச்சிதறலின் அடிப்படை..!!

அவளின் பேச்சுக்கள் போதும்
அணுக்களை துகளாக பிளக்க..!!

அவளின் விழிகளுக்கு வழிகாட்ட
திசைகாட்டி திணறிப்போகும்..!!

அவள் கோவத்தின் பிரதிபலிப்பே
கதிரியக்கத்தின் வீச்சுக்கள்..!!

அவள் அழுகையின் மிச்சங்களே
அகச்சிவப்பு கதிர்களின் செறிவு..!!

இந்நிகழ் காலத்தின் கணிக்கமுடியா
நிகழ்தகவு அவளின் செய்கை..!!

விண்மீன்கள் கண் வைத்தாலும்,
வானம் வெட்கத்தில் சிவந்தாலும்,
புவியீர்ப்பு விசை செயலிழந்தாலும்,
அறிவியல் வியக்கும் அழகியை
படைத்ததினால் நானும் விஞ்ஞானியே..!!

எழுதியவர் : மனோ ரெட் (10-May-13, 1:04 pm)
பார்வை : 260

மேலே