காவியத் தலைவி
என் மனம் என்ற
கல்லறையை உடைத்து
நீ கோபுரம்
கட்டத் துணிந்தாய்...
உடைத்த மனம்
கோபுரமானது
உன் மண வாழ்வில்....
ஆனால்
சிதறிக் கிடந்த
கல்லறைத் துகள்களோ....
காவியமானது
என் மரண வாழ்வில்......
ஆம் பெண்ணே!
என் வாழ்நாள் காவியத் தலைவி
நீ தானடீ..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
