கனா காணாத காலங்கள்..!!!

கனவுகள் தொலைத்து நானும் தொலைந்து
உண்மை காதல் கொண்டேனே,
என் தூக்கம் தொலைத்து
கனவை தேடி பேயாய் அலைந்தேனே..!!
கனவு காண்பது நிஜம் இல்லையே,
நிஜமாய் நீ வந்தால் அது கனவே இல்லையே..!!
ஓயாமல் உன்னை மறக்க சொல்ல சொல்லி
உயிரை வாங்குகிறாய்,
என்னுள் இருப்பது என்னுயிர் அல்ல
உன்னுயிர் தானென்று எப்படி சொல்வது..??
சிரிக்க தெரியா பாவி போல
நீ சொல்வதற்கெல்லாம் அழுதேனே,
அழுது அலுத்து சிரிப்பதை மறந்து
நீயின்றி பைத்தியமாய் சிரிக்கிறேன்..!!
என் இதயம் துளைத்து வார்த்தை எடுத்து
காதலை சொல்ல வந்தேன்,
உன் ஒற்றை நாக்கில் காதல் மறுத்து
உடனே ஓடிவிட்டாய்..!!
காதல் ஆடும் மரண ஆட்டத்திற்கு
நான் என்ன விதிவிலக்கா..??
என்னிடம் இருப்பது ஒரு உயிர் தானே
மீண்டும் எடுக்க பார்க்காதே..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
