நண்பனின் நாட்குறிப்புகள்...!!!

விடிந்தும் விடியாத காலை நேரம்,
தூக்கத்தை தின்று கொண்டிருந்தது
என் பொல்லாத கனவு..!!
கனவில் நான் இறப்பது போலவும்
அதை பார்த்து என் நண்பனும் இறப்பதாய்
வந்த கனவு அந்த முழு நாளையும் தின்றது..!!
இறப்பிலும் என் நண்பன் என்னுடன் என்ற போது
இறப்பும் எனக்கு பெரிதாய் பயமில்லை..!!

என் எச்சில் உணவை ஒரே தட்டில்
அவனுடன் பகிர்ந்து கொண்ட போது,
திடிரென அவனுக்கு விக்கல் வர
யாரோ நினைப்பதாய் நான் சொல்ல,
நீ என்னுடன் இருக்க வேறு யார்
என்னை நினைப்பது என அவன் சொல்ல,
எனக்கும் விக்கல் வந்துவிட்டது
என்னை அவன் நினைத்த போது..!!!

சிறு சண்டையில் நாங்கள் பிரிந்தோமே தவிர
எங்களின் நட்புக்குள் பிரிவில்லை,
கால் தவறி நான் விழுந்த நேரம்
யாரோ போல என்னை பிடித்து
அவன் தாங்கும் போது,
நன்றி என நான் சொல்ல
புன்னகை மட்டும் உதிர்த்து,
நட்புக்குள் நன்றி வெறும் வார்த்தையே
என்பதை உணர்த்தி விட்டு
மீண்டும் என்னுடன் வந்தான் என் நண்பன்...!!

எழுதியவர் : மனோ ரெட் (20-May-13, 2:07 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 245

மேலே