இன்பம்+வழிகாட்டி = நண்பன்

இன்பத்திற்கு அர்த்தம்
சொல்லுகிறேன்,

இதயம் துடிக்கும் ஒவ்வொரு
துடிப்பும் என்
இனிப்பான நண்பர்கள் மீது,

பல சந்தோசங்கள் இடையே
சில சண்டைகள்,
நிறைவான இன்பம்
மீண்டு இணையும்போது,

இதுமட்டுமே வாழ்க்கை என்று
நினைக்கும் இணைந்திருக்கும்
சில நிமிடங்கள்,

இறுதி நிமிடம் பிரியும்
சோகம் எங்களுக்கல்ல,
காரணம்,
எப்போது இணைவோம் என்ற
ஏக்கம் மட்டுமே,

உயிர்தந்த தெய்வங்களுக்கு
ஒருபடி உயர்வோ
என் மீது உரிமை உள்ள
நண்பர்கள்

ஏங்குகிறேன்
எப்போதும் பிரியாமல்
இருக்க வேண்டும்
இறுதி வரை ........

எழுதியவர் : முத்து ஸ்ரீ (20-May-13, 11:36 am)
பார்வை : 204

மேலே