எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

ஆண்:
முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே,
இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே,
என் கைகள் பற்றி கொள்வாயா...??
என் கண்ணில் தினம் வசிப்பாயா..??
வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!!

பெண்:
என்னை கேட்க வேண்டாம்,
என்னை நினைக்கவும் வேண்டாம்,
எப்போதோ உன்னை பற்றி கொண்டேன்,
உன் கண்களில் என்னை ஒட்டி கொண்டேன்,
வாசல் பார்க்காதே உன் சுவாசமாய் நான்..!!

ஆண்:
அடி உன்னை பார்க்கும் பொழுது
வானத்துல நிலவும் பொய்யா போனதே,
பெண்:
நிலா கூட நான் பேசும் போது
உன் காதல் சொல்லி ரசிக்குதே..!!
ஆண்:
ஊர் சொல்லுது உலகம் சொல்லுது
நம் காதல் பொய்யா..??
பெண்:
யார் என்ன சொன்னாலுமே
நம் காதல் வெல்லுமே..!!
ஆண்:
ஐயோ யார் இவளோ,
எந்த சாமி எனக்காக அனுப்பி வச்சதோ..!!


பெண்:
நீ மட்டும் போதுமே வேறெதுவும் வேண்டாமே,
உன் உள்ளங்கையில் நானிருந்தால் போதுமே..!!
ஆண்:
நீ சொல்ல தேவை இல்லையே,
என் ரேகை அழித்து உன்னை வரைவேனே..!!
பெண்:
என்னை படைச்ச கடவுளும் இப்போ
பெரிதாய் தெரியவில்லையே..!!
ஆண்:
கடவுள் என்ன பெரிய கடவுள்
உனக்காக நான் இருக்கேனே..!!
பெண்:
இது போதும் சாமி
நான் இப்போதே உயிரை விடுவேனே...!!
ஆண்:
உயிரை விட்டு எங்கே செல்வாய்
போக போவது உன் உயிர் மட்டுமா..??

எழுதியவர் : மனோ ரெட் (1-Aug-13, 11:32 am)
பார்வை : 120

மேலே