லேட்டா சொல்றேன் ஆனா பயன்படற மாதிரி சொல்றேன்

இந்த வருஷத்துல நெறைய சிறப்பு தினங்கள் வருது .. அது என்ன என்ன இன்னு பார்க்கலாமா ...


2014ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 21ம் தேதிகளில் இரண்டு முறை அனுமன் ஜெயந்தி வருகிறது.

• 2014 ஆங்கில புத்தாண்டில் அமாவாசை இருந்தது போல தமிழ்ப்புத்தாண்டில் (ஏப்ரல் 14) பவுர்ணமி தினமாகும்.

• சித்திரை மாதம் கடைசிநாளில் சித்ரா பவுர்ணமி வருகிறது.

• ஜனவரி 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

• ஜனவரி மாதமும், மார்ச் மாதமும் 2-முறை அமாவாசை தினம் வருகிறது.

• ஜனவரி 30ம் தேதி அமாவாசை தினத்தன்று திருவோணமும் வருகிறது.

• ஜனவரி 11ம் தேதி ஏகாதசி தினத்தன்று கிருத்திகையும் வருகிறது.

• பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரதோஷம் தினத்தன்று சிவராத்தி, திருவோணம் ஆகியவையும் சேர்ந்துள்ளது.

• ஏப்ரல் மாதம் 3ம் தேதி சதுர்த்தி தினத்தன்றே கிருத்திகையும் வருகிறது.

• மே மாதம் அமாவாசை தினத்தன்று கிருத்திகை தினமும் சேர்ந்துள்ளது.

• ஆகஸ்டு மாதம் 10ம் தேதி பவுர்ணமி தினத்தன்று திருவோணமும் உள்ளது.

• அக்டோபர் மாதம் 11ம் தேதி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று கிருத்திகை தினமும் வருகிறது.

• நவம்பர் மாதம் 27ம் தேதி சஷ்டியும், திருவோணமும் சேர்ந்து வருகிறது. அதேபோன்று நவம்பர் 20ம் தேதி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வருகிறது.


நன்றி தோழி கிருஷ்ணா ..

எழுதியவர் : (30-Aug-14, 2:39 pm)
பார்வை : 308

மேலே