தாழ்வு மனப்பான்மையை

தாழ்வு மனப்பான்மையை..
.............................................

உங்களால் ஒரு செயலைச் செய்ய முடியாவிட்டால் “ஐயோ! இந்தச் செயலை நம்மால் செய்து முடிக்க இயலவில்லையே!” என்ற ஏக்கமும் கவலையும் வந்து விடுகிறது.

இதனால் உங்கள் மனம் பேதலித்துப் பலவகை உணர்ச்சி களினால் தத்தளித்துத் தடுமாறுகிறது.

நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போன்று எத்தனையோ பேர் உள்ளக் கிளர்ச்சிகளினாலும், மன எழுச்சி களினாலும், தடுமாறித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், அவர்கள் உள்ளத்தைச் செம்மைப்படுத்தாததுதான்!

ஒருவருக்கு இருக்கும் ஆற்றல் மற்றவருக்கு இருக்கும் என்று கூறமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருந்து கொண்டுதான் இருக்கும்.

என்னால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. இந்த உலகம் என்னை ஒதுக்கி வைத்து விட்டது. என்னை யாரும் கண்டு கொள்வதே இல்லை. மற்றவரைப் புகழ்ந்து பேசும் உலகம் என்னை மட்டும் ஏன் பேசுவதில்லை? என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களைத் தாழ்வு மனப்பான்மை ஆட்டிப் படைக்கும்.

உங்களைப் பற்றி நீங்களே மிகவும் இழிவாக நினைத்துக் கொண்டிருந்தால் அதைத் தாழ்வு மனப்பான்மை என்று எண்ணாமல், உயர்வு மனப்பான்மை என்று எப்படிச் சொல்ல முடியும்!

உங்களைக் கேவலப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே பிறர் உங்களை மட்டம் தட்டும் போதோ அல்லது கேலியாகப் பேசும் போதோ அவைகளை நீங்கள் நம்பி விடுகிறீர்கள்.

மற்வர்கள் பேசும் மட்டமான பேச்சுக்கள் உங்கள் மனதில் அம்புகளாக மாறி விடுகின்றன. அவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் போதோ அல்லது அவைகளைக் கண்டு வருத்தப்படும் போதோ, தாழ்வு மனப்பான்மை என்ற சைத்தான் உங்கள் உள்ளத்தில் வந்து உட்கார்ந்து விடுவான்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையை உங்களிடமிருந்து

போக்க முடியாதா? ஏன் முடியாது?

எவர் எதைச் சொன்னாலும்,

உலகமே உங்களை எதிர்த்தாலும்

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.

நீங்கள் உங்கள் மேல் வைக்கும் தன்னம்பிக்கையால்

தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஓடி விடும்.

ஆம்.,நண்பர்களே.,

இந்த உலகம் உங்களைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்

அதைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்!

அவைகளைத் துச்சமென மதியுங்கள், உங்கள் மனதைப்

பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அச்சம்

கண் காணாத இடத்திற்குச் சென்றுவிடும்.

எந்தக் காலத்திலும் உங்களைப் பற்றிய தளராத

நம்பிக்கையோடு நீங்கள் செயல்படுங்கள்.

தாழ்வு மனப்பான்மையை அடியோடு தகர்த்தெறியுங்கள்.

பின்பு பாருங்கள் வெற்றி எப்போதும் உங்களிடத்தில்தான்.

எழுதியவர் : படித்ததில் சுவைத்தது (20-Aug-15, 3:54 pm)
சேர்த்தது : நகைச்சுவைமன்னன்
பார்வை : 883

மேலே